வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு: பஞ்சாப் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம்


வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு: பஞ்சாப் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2020 7:13 AM GMT (Updated: 25 Sep 2020 7:13 AM GMT)

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சண்டிகர்,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாரதிய கிசான் சங்கம், கிசான் மஸ்தூர் சங்கராஷ் உள்ளிட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், மாநிலத்தின் பல பகுதிகளில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் சிறப்பு மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே மட்டும் இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 28 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஹரியாணா மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போராட்டம் நடைபெறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story