பீகார் சட்டசபை தேர்தல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தலைமை தேர்தல் ஆணையாளர் விளக்கம்
பீகார் சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தலைமை தேர்தல் ஆணையாளர் விளக்கம் அளித்து உள்ளார்.
புதுடெல்லி,
பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் 29ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு சட்டசபை தேர்தலை நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு அறிவிக்க உள்ளது. வருகிற அக்டோபரில் ஒரு சில கட்டங்களில் தேர்தல் நடத்தப்பட கூடும் என கூறப்படுகிறது.
பீகாரில் பொதுமக்களிடையே கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையாக உள்ளது.
இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இதில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் கூடிய வாக்களிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார். இதன்படி, 7 லட்சம் சேனிட்டைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.), 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் (ஜோடி) கையுறைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோன்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஒரு முறை பயன்படுத்தப்படும் 7.2 கோடி கையுறைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story