கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று


கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 25 Sep 2020 12:47 PM GMT (Updated: 2020-09-25T18:17:31+05:30)

கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்று நாட்டில் பரவிய துவக்க காலத்தில் தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளா, தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று 3,481-பேர் குணம் அடைந்துள்ளனர்.  கேரளாவில்  தொற்று பாதிப்புடன் 48,982- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 11 ஆயிரத்து 331- பேர்  இதுவரை மீண்டுள்ளனர்.


Next Story