சாலையோர உணவுப்பொருட்களும் இனி ஆன் லைனில் கிடைக்கும்...?


சாலையோர உணவுப்பொருட்களும் இனி ஆன் லைனில் கிடைக்கும்...?
x
தினத்தந்தி 6 Oct 2020 7:34 AM GMT (Updated: 6 Oct 2020 7:34 AM GMT)

சாலையோரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ஆன்லைன் தளங்கள் மூலம் சந்தைக்குக் கிடைக்க மத்திய அரசு ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி

சாலையோரங்களில் உணவுப் பொருட்களை ஆன்லைன் தளங்கள் மூலம்  கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் ஸ்வானிதி திட்டத்தின் கீழ் ஆன்லைன் தளங்கள் மூலம் தெரு உணவு விற்பனையாளர்களுக்கு சந்தை வழங்க வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் ஸ்விக்கியுடன்  கைகோர்த்துள்ளது.

முதல்கட்டமாக  அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர் மற்றும் வாரணாசி ஆகிய 5 நகரங்களின் தெரு உணவு விற்பனையாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் சுமார் 50 லட்சம் தெரு உணவு விற்பனையாளர்கள் பயனடைய வாய்ப்புள்ளது.

அரசாங்கத்தின் முயற்சியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் மாநகராட்சிகள், எஃப்எஸ்எஸ்ஏஐ, ஸ்விக்கி மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

Next Story