"வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது" - ஹாத்ரஸ் விவகாரத்தில் உ.பி.அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்


வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது - ஹாத்ரஸ் விவகாரத்தில் உ.பி.அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
x
தினத்தந்தி 6 Oct 2020 11:47 AM GMT (Updated: 6 Oct 2020 11:47 AM GMT)

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு தலித் பெண் பலியான விவகாரம் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 19 வயது தலித் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட கோரிய பொது நலன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில், உத்தரப்பிர​தேச அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. சாதி மற்றும் மத சக்திகள் இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என உளவுத்துறை எச்சரித்த தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில், நியாயமான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக அவப்பெயரை சில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு சில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் சாதி சாயம் பூசி வருகின்றன என்றும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story