போராட்டங்களுக்காக பொது இடங்களை நீண்ட காலம் ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல- உச்ச நீதிமன்றம்


போராட்டங்களுக்காக பொது இடங்களை நீண்ட காலம் ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல- உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 7 Oct 2020 7:43 AM GMT (Updated: 7 Oct 2020 8:12 AM GMT)

போராட்டங்களுக்காக பொது இடங்களை நீண்ட காலம் ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாகில் நடைபெற்ற போராட்டம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என தெரிவித்து வழக்கறிஞர் அமித் சகானி தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. போராட்டம் என்ற பெயரில் பொது இடத்தை காலவரையற்று ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 

போராட்டங்கள் அமைதி வழியில் நடைபெற வேண்டுமே தவிர, பொது மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள நீதிபதிகள்,  தங்களது எதிர்ப்பை தெரிவிக்க எந்த ஒரு தனி மனிதரோ, அமைப்போ சாலை, தெருக்களை அடைத்து போராட்டங்களை நடத்தக்கூடாது என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

போராட்டங்கள் நடத்துவதற்காக என ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டங்கள் நடைபெற வேண்டும் என்றும், சாலைகள், தெருக்களை மறித்து நடத்தும் போராட்டங்களை அகற்ற நீதிமன்றத்தின் உத்தரவு தேவையில்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.  அரசு நிர்வாகமே உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஷாகீன்பாக் போராட்ட விவகாரத்தில் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story