கேரளாவில் மின்சார துறை மந்திரிக்கு கொரோனா உறுதி
கேரளாவில் மின்சார துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஏற்கனவே நிதித்துறை மந்திரி தாமஸ் ஐசக், தொழில்துறை மந்திரி இ.பி.ஜெயராஜன், வேளாண்மை துறை மந்திரி வி.எஸ்.சுனில் குமார் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
தற்போது மின்சார துறை மந்திரி மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 75 வயதான அவர், தனது பேஸ்புக் பதிவில் இதை வெளியிட்டு உள்ளார். அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகரித்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி 2 லட்சத்து 40 ஆயிரத்து 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story