இந்தியாவின் 100 பணக்காரர்கள் 2020: கொரோனாதொற்றுநோய் காலத்திலும் சொத்து மதிப்பு 14% உயர்வு
கொரோனாதொற்றுநோய் காலத்திலும் இந்தியாவின் 2020 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 14% உயர்ந்து உள்ளது
புதுடெல்லி
கொரோனா தொற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, 60 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளுடன் - உலகின் இரண்டாவது மிக உயர்ந்த பாதிப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சியில் 24 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த துன்பம் இருந்தபோதிலும், நாட்டின் 100 பணக்காரர்களில் பாதி பேர் லாபம் ஈட்டி உள்ளனர், இது முந்தைய வருமானத்தை விட 14 சதவீதம் உயர்ந்து 517.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
இந்த அதிகரிப்பில் பாதிக்கும் மேலானது ஒரு தனிநபருக்கு என கூறலாம். 13 ஆம் ஆண்டிற்கான முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானி, 37.3 பில்லியன் டாலர்களை செல்வத்தில் சேர்த்துள்ளார் - இது 73 சதவீத உயர்வு ஆகும் நிகர மதிப்பு 88.7 பில்லியன் டாலர் ஆகும்.
2 வது இடத்தில் உள்கட்டமைப்பு அதிபர் கவுதம் அதானி தனது நிகர மதிப்பை 61 சதவீதம் உயர்த்தி 25.2 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளார். நாட்டின் இரண்டாவது பரபரப்பான மும்பை விமான நிலையத்தில் 74 சதவீத பங்குகளை வாங்கினார். ஜூலை மாதம் எச்.சி.எல் டெக்னாலஜிஸின் தலைவர் பதவியை தனது மகள் ரோஷ்னி நாதர் மல்ஹோத்ராவுக்கு வழங்கிய தொழில்நுட்ப அதிபர் ஷிவ் நாடார், இந்தியாவின் மூன்றாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததால் 20.4 பில்லியன் டாலர்களுடன் 3 வது இடத்திற்கு உயர்ந்து உள்ளார்.
Related Tags :
Next Story