மாநிலங்களவையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது


மாநிலங்களவையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 14 Oct 2020 6:22 AM IST (Updated: 14 Oct 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

11 இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

புதுடெல்லி, 

உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட ஹர்தீப்சிங் பூரி (சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்), சந்திரபால்சிங் யாதவ், ஜாவீத் அலிகான், அருண்சிங், நீரஜ் சேகர், பி.எல்.புனியா, ரவி பிரகாஷ் வர்மா, ராஜாராம், வீர்சிங் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நடிகர் ராஜ் பப்பார் ஆகியோரது பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த காலியிடங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது.

அதன்படி 11 இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு அடுத்த மாதம் 2-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

மேலும், தேர்தல் வாக்குப்பதிவு 9-ந் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

Next Story