பாலியல் குற்றவாளியை எம்.எல்.ஏ. மீட்ட சம்பவம்: யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல், பிரியங்கா கேள்வி


பாலியல் குற்றவாளியை எம்.எல்.ஏ. மீட்ட சம்பவம்: யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல், பிரியங்கா கேள்வி
x
தினத்தந்தி 19 Oct 2020 1:17 AM GMT (Updated: 2020-10-19T06:47:05+05:30)

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட ஒருவரை பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் போலீஸ் பிடியில் இருந்து மீட்டுச் சென்ற சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில், பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட ஒருவரை பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் போலீஸ் பிடியில் இருந்து மீட்டுச் சென்ற சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில், “பெண் குழந்தைகளை காப்போம்” என்று தொடங்கி, “குற்றவாளிகளை காப்போம்” என்று போய்க் கொண்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பதிவில், “இது எந்த திட்டத்தின் கீழ் நடந்தது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சொல்வாரா? ‘பெண் குழந்தைகளை காப்போம்’ திட்டமா? அல்லது ‘குற்றவாளிகளை காப்போம்’ திட்டமா?” என்று கூறியுள்ளார்.

Next Story