தசரா பண்டிகையையொட்டி ராஜ்நாத் சிங் சிக்கிம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 23-24 தேதிகளில் சிக்கிம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
சீனாவுடனான தற்போதைய எல்லை மோதல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வருகின்ற 23-24 தேதிகளில் சிக்கிம் செல்ல உள்ளதாகவும், அங்கு வீரர்கள் மற்றும் மக்களை எல்லைப் பகுதிகளுக்கு எளிதாக செல்வதற்கு கட்டப்பட்ட பல சாலை மற்றும் பாலங்களை திறந்து வைப்பார் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீன எல்லைக்கு அருகிலுள்ள சிக்கிமில் நிறுத்தப்பட்டுள்ள உள்ளூர் பிரிவுகளில் ஒன்றில் தசராவின் போது ஆண்டுதோறும் போர்வீரர்கள் ஆயுதங்களை வணங்குகிறார்கள். எனவே இந்த பூஜையில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன துருப்புகளால் ஊடுருவக்கூடிய முயற்சியையும் தடுக்க எல்லையில் வீரர்களை நிறுத்தியுள்ள இடங்களையும் ராஜ்நாத் சிங் பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story