ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்


ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 24 Oct 2020 2:17 AM GMT (Updated: 24 Oct 2020 2:17 AM GMT)

ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

புதுடெல்லி:

ஐ.நாவின் 75 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி  நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:-

ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினராக, ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை வடிவமைப்பதில் இருந்து, அதன் அமைதியைக் காத்துக்கொள்வதில் முன்னணியில் இருப்பது வரை, இந்தியா தனது இதயப்பூர்வமாக பங்களிப்பை ஆற்றி உள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா கடுமையாக பணியாற்றி உள்ளத

உலகெங்கிலும் உள்ள ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணிகளுக்கு இந்தியா பெரும் படைகளை வழங்கி வருகிறது.

ஐ.நா.வின் 75 ஆவது ஆண்டு நிறைவு என்பது இந்த அமைப்புக்கு ஒரு முக்கியமான மைல்கல் உலக அமைப்பு உலக நாடுகள் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைந்து மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்தை நோக்கி செயல்பட ஒரு தளமாக உள்ளது.

"ஐ.நா.வின் 75 ஆண்டுகால பயணத்தின் இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில், ஐ.நா.வின் குறிக்கோள்களையும்  அதன் உறுப்பு நாடுகளின் அபிலாஷைகளுக்கு நெருக்கமாக கொண்டுவருவதற்கு கைகோர்க்கவும், வீரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட நாங்கள் எங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வோம் என கூறினார். 

Next Story