தேசிய செய்திகள்

வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு: உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு + "||" + Kangana Ranaut calls Uddhav Thackeray ‘worse product of nepotism

வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு: உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு

வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு: உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு
வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு உத்தவ் தாக்கரே தான் என்று நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மும்பை, 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரையும், மராட்டிய அரசையும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதை அடுத்து மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ உங்கள் மகன் வயதில் உள்ள பெண் மீதான கோபத்தால், முதல்-மந்திரியாக நீங்கள் ஒட்டு மொத்த மாநிலத்தின் மாியாதையையும் குறைக்க வைத்திருக்கிறீர்கள். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். நான் உங்களது மகன் வயது பெண். சுயமாக முன்னேறிய ஒரு பெண் குறித்து இப்படிதான் பேசுவீர்களா?. நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு.” என்று அவர் கூறினார். 

முன்னதாக இந்த விவகாரம் குறித்து சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, “தங்களது வீட்டில் வாழ்வாதாரம் இல்லாமல் மும்பை வந்தவர்கள் அதற்கு துரோகம் செய்கின்றனர்” என்று கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை
வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் என்று தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2. வாரிசு அரசியல்; உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு
வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு உத்தவ் தாக்கரே என நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்து உள்ளார்.