மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று


மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 Oct 2020 8:26 AM GMT (Updated: 27 Oct 2020 8:26 AM GMT)

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்த நிலையில், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story