மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி


மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி
x

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

போபால்,

மத்தியபிரதேசம் மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஷியோபூர் மாவட்டம் விஜய்பூர் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் அதிகமானோர் ஒருவேனில் தங்கள் சொந்த ஊர் சென்றுகொண்டிருந்தனர்.

சிவபுரி மாவட்டத்தில் போஹ்ரி-கக்ரா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story