பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து மந்திரி சந்திப்பு


பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து மந்திரி சந்திப்பு
x
தினத்தந்தி 17 Dec 2020 2:39 AM GMT (Updated: 2020-12-17T08:09:08+05:30)

இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், 3 நாள் பயணமாக கடந்த 14-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார்.

புதுடெல்லி, 

இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், 3 நாள் பயணமாக கடந்த 14-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலையில் இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர்.

இத்தகவலை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக மோடி கூறியுள்ளார்.

Next Story