ஷீரடி சாய்பாபா கோவில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் அறக்கட்டளை அறிவிப்பு
ஷீரடி சாய்பாபா கோவில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மும்பை,
அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. கடந்த மாதம் மாநில அரசு அனுமதி அளித்ததை அடுத்து 8 மாதங்களுக்கு பிறகு சாய்பாபா கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.
இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டு கோவிலுக்கு வருமாறு நிர்வாகம் கேட்டு கொண்டு உள்ளது.
இதுகுறித்து கோவில் அறக்கட்டளை ஊழியர் ஒருவர் கூறுகையில், “ஆரம்பத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் வரை கோவிலுக்கு வந்து கொண்டு இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. விடுமுறை நாட்கள், வியாழன், வாரஇறுதி நாட்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து எங்களால் தினந்தோறும் 12 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடியும்.
எனவே பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்துவிட்டு கோவிலுக்கு வர வேண்டும். சாமி தரிசனம் செய்வதற்கான பாசை ஆன்லைன் மூலம் பக்தர்கள் பெறலாம். கொரோனா பரவலை கருத்தில்கொண்டு 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story