திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகளை தேவஸ்தான அதிகாரி பார்வையிட்டு ஆய்வு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகளை தேவஸ்தான அதிகாரி பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 24 Dec 2020 3:59 AM GMT (Updated: 24 Dec 2020 3:59 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடுகளை தேவஸ்தான அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை முழுவதும் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி நேற்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அப்போது அவர் கூறுகையில், பக்தர்கள் திருமலையில் தங்கி ஓய்வெடுக்க வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருமலையில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பக்தர்கள் சாமி தரிசனம் ெசய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு வர வேண்டும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் யாரும் திருமலைக்கு வர வேண்டாம். 

சொர்க்கவாசல் வழியாக சென்று மூலவர் மற்றும் உற்சவர் மலையப்பசாமியை தரிசிக்க ஜனவரி 3-ந்தேதி வரையிலான டிக்கெட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டது, தற்போது உள்ளூர் மக்களுக்கு மட்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது, என்றார்.

Next Story