ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் - பிரான்ஸ் கோரிக்கை


ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்  - பிரான்ஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jan 2021 9:31 AM GMT (Updated: 1 Jan 2021 9:31 AM GMT)

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி

ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இவை தவிர 10 நாடுகள் இரண்டாண்டுக் காலத்துக்கு உறுப்பினராக இருக்கும். அதன்படி இந்தியா இன்று முதல் இரண்டாண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இடம்பெறுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம் முழுவதும் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு இந்தியா தலைவராக இருக்கும்.

பாதுகாப்புசபையின் உறுப்பினராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனெய்ன், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கான பிரான்ஸ்  தூதர் இம்மானுவேல் லெனெய்ன் தனது டுவிட்டரில்  கூறியதாவது:-

அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில்  சேரும் இந்தியாவை பிரான்ஸ் வரவேற்கிறது. இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்தவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், பலதரப்பு வாதத்தை பாதுகாக்கவும் நாங்கள் பக்கபலமாக பணியாற்ற ஆர்வமாக உள்ளோம் என கூறினார்.

Next Story