இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை


இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை
x
தினத்தந்தி 1 Jan 2021 2:57 PM GMT (Updated: 1 Jan 2021 2:57 PM GMT)

இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் அச்சத்தால் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை டிசம்பர் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 

இந்தநிலையில்  மரபணு உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கான விமான சேவை தடை ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்றும் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். ஜன. 23 ஆம் தேதி வரை வாரத்திற்கு 15 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Next Story