தேசிய செய்திகள்

அரியானாவில் 3 நாட்களில் நடந்த 2 ஆணவ கொலைகள் + "||" + 2 honour killings in 3 days in Haryana

அரியானாவில் 3 நாட்களில் நடந்த 2 ஆணவ கொலைகள்

அரியானாவில் 3 நாட்களில் நடந்த 2 ஆணவ கொலைகள்
அரியானாவில் 3 நாட்களில் ஆணவ கொலைக்கு 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
சண்டிகர்,

அரியானாவின் பானிபட் நகரில் வசித்து வந்தவர் நீரஜ் (வயது 23).  இவர் வேறு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து உள்ளார்.  இந்த ஜோடி கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த நவம்பரில் திருமணம் செய்து கொண்டது.

இதனால் பெண்ணின் சகோதரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  அதன்பின்னர் தொடர்ச்சியாக நீரஜுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.  இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை இரவில் அந்த வாலிபரை பெண்ணின் சகோதரர்கள் நகரின் சந்தை பகுதியில் சூழ்ந்து கொண்டு ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த கத்துக்குத்து காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீரஜ் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை ரோஹ்தக் பகுதியில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த ஜோடி ஒன்று மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது.  அரியானாவில் கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து 2 ஆணவ கொலைகள் நடந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் அரசு பள்ளியில் மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம் அனுப்பி வைத்த அவலம்
மராட்டியத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம் அனுப்பி வைக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
2. டெல்லியில் தொடர்ந்து காகம், வாத்து அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு
டெல்லியில் தொடர்ந்து காகம் மற்றும் வாத்து பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
3. டெல்லியிலும் பறவை காய்ச்சலா? பூங்காவில் இறந்து கிடந்த 200 காகங்கள்
நாட்டில் பல இடங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் சூழலில் டெல்லி பூங்காவில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
4. கொரோனா தொற்று; கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை
உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
5. பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு
பிரான்சில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது.