‘அரசு-விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதது கவலை அளிக்கிறது’; மாயாவதி சொல்கிறார்


‘அரசு-விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதது கவலை அளிக்கிறது’; மாயாவதி சொல்கிறார்
x
தினத்தந்தி 9 Jan 2021 7:45 PM GMT (Updated: 9 Jan 2021 7:45 PM GMT)

‘அரசு-விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதது கவலை அளிக்கிறது’ என மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம், 40 நாட்களைக் கடந்து நீடிக்கிறது. அரசு- விவசாயிகளுக்கு இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்திருப்பது, மிகவும் கவலை அளிக்கிறது.

 விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story