தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் கலப்பட கள் குடித்த ஒருவர் பலி; 143 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + 1 Dead, 143 Hospitalised In Telangana After Consuming Toxic Toddy

ஐதராபாத்தில் கலப்பட கள் குடித்த ஒருவர் பலி; 143 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஐதராபாத்தில் கலப்பட கள் குடித்த ஒருவர் பலி; 143 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
விக்ராபாத் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கலப்படம் கலந்து விற்கப்பட்ட கள் மற்றும் உணவுப்பொருளால் ஏற்பட்ட ஒவ்வாமையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது,
ஐதராபாத், 

ஐதராபாத் அருகே விக்ராபாத் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கிராமத்தினர், வெள்ளிக்கிழமை இரவில் திடீர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களில் 17 பேர் புறநோயாளிகளாகவும், அதிகமாக பாதிக்கப்பட்ட மற்றவர்கள் உள்நோயாளிகளாகவும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பெற்றவர்களில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 143 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். விக்ராபாத் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கலப்படம் கலந்து விற்கப்பட்ட கள் மற்றும் உணவுப்பொருளால் ஏற்பட்ட ஒவ்வாமையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது, ஆனால் இறந்தவரின் உடற்கூறு சோதனைக்கு பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.