தேசிய செய்திகள்

டேய் நான் காட்டுக்கு ராஜா டா.....சிங்கத்தை தெறிக்கவிட்ட மாஸ் நாய்! - வீடியோ + "||" + Need this much confidence in life. Dog vs Lion. It also highlights issue of stray dogs & wildlife interaction.

டேய் நான் காட்டுக்கு ராஜா டா.....சிங்கத்தை தெறிக்கவிட்ட மாஸ் நாய்! - வீடியோ

டேய் நான் காட்டுக்கு ராஜா டா.....சிங்கத்தை தெறிக்கவிட்ட மாஸ் நாய்! - வீடியோ
சிங்கத்துடன் சண்டைபோட்டு அதனை விரட்டிய நாய் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மும்பை,

என்னதான் காட்டிற்கே ராஜாவாக சிங்கம் இருந்தாலும், சிங்கம் கொஞ்சம் சோம்பேறி இது நாம் எல்லோருக்கும் தெரியும். பார்த்தாலே பயம் வரவைக்கும் சிங்கத்தை நாய் ஒன்று குலைத்தும் வீரத்துடன் சண்டையிட்டும் துரத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரல் ஆகி வருகிறது.

பர்வீன் கஸ்வான் என்ற ஐஎப்எஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், பார்வையாளர்கள் ஜீப்பில் நின்று வீடியோ எடுக்க, அவர்களை பின்தொடர வரும் சிங்கத்தை அங்கிருக்கும் நாய் துணிச்சலுடன் சண்டையிட்டு துரத்துகிறது.

அதுவும் ஒரு சிங்கமல்ல. இரண்டு சிங்கங்களை நாயின் குலைக்கும் சத்தத்தோடு துணிச்சலான சண்டையால் பயந்து போன சிங்கங்கள் அங்கிருந்து பின் வாங்குகின்றன. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து 

”வாழ்க்கையிலும் இந்த அளவுக்கு நம்பிக்கை தேவை” என்று தன்னம்பிக்கையூட்டும் விதமாக பகிர்ந்திருக்கிறார், அவர். பலரும் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நாயின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள். தன் பலம் தனேக்கே தெரியாது என்பது போல இந்த நிகழ்ச்சி இருப்பதாக சமூகதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.