போகி பண்டிகை கொண்டாடிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு


போகி பண்டிகை கொண்டாடிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 13 Jan 2021 4:04 AM GMT (Updated: 13 Jan 2021 6:22 AM GMT)

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார்.

புதுடெல்லி,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படுவது போகி பண்டிகை ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையையொட்டி வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். 

அதன்படி இன்று அதிகாலையில் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு டெல்லியில் தனது குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார். இன்று அதிகாலை தனது இல்லத்தில் வைத்து விறகுகளை எரித்து போகி பண்டிகையை அவர் கொண்டாடினார்.

Next Story