தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு + "||" + Rajasthan bus fire accident - 6 killed, 17 injured

ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள மகேஷ்பூரில் சனிக்கிழமை(நேற்று) இரவு 10.30 மணியளவில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து தீடீரென தீப்பிடித்து எரிந்தது. மின்சார வயர் மீது பேருந்து உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் வரும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 16 முதல் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ராஜஸ்தான்: காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பியோட்டம்
ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர்.
3. ராஜஸ்தான் மாநிலம் பலோடி சிறையில் இருந்து 16 கைதிகள் தப்பிய விவகாரம்: 16 காவலர்கள் சஸ்பெண்ட்
ராஜஸ்தான் மாநிலம் பலோடி சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் 16 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
4. ராஜஸ்தான்; ஜோத்பூர் ஐஐடி மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடியில் மாணவர்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பழைய நிலையை எட்டுமா ராஜஸ்தான்?
வருகிற 9-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பற்றிய ஒரு அலசல்.