டெல்லியில் மேலும் 161- பேருக்கு கொரோனா தொற்று


டெல்லியில் மேலும் 161- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 Jan 2021 2:15 PM GMT (Updated: 18 Jan 2021 2:15 PM GMT)

டெல்லியில் இன்று புதிதாக 161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் புதிதாக 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒருநாளில் மட்டும் 362 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், கொரோனா வைரசால் 8 பேர் பலியாகியுள்ளனர்.  

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரத்து 590- ஆக உள்ளது. தொற்றில் இருந்து 6 லட்சத்து 19 ஆயிரத்து 501- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,335- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,754- ஆக உள்ளது.


Next Story