டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு


டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 18 Jan 2021 2:34 PM GMT (Updated: 18 Jan 2021 2:49 PM GMT)

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப்பேசினார்.

புதுடெல்லி,

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தது. அந்த கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றும் அ.தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

இரவு 7.30 மணியளவில் உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதாக கூறப்படுகிறது.  தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்தும் இருவரும் ஆலோசிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 


Next Story