ஆறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்கிறது இந்தியா


ஆறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்கிறது இந்தியா
x
தினத்தந்தி 19 Jan 2021 3:45 PM GMT (Updated: 19 Jan 2021 3:45 PM GMT)

ஆறு அண்டை நாடுகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசியை இந்தியா விநியோகம் செய்ய உள்ளது.

புதுடெல்லி

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,   அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்சு ஆகிய நாடுகளுக்கு உதவி அடிப்படையில்  கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதை பாராட்டி பிரதமர் மோடி கூறுகையில், “சர்வதேச சமூகத்திற்கான சுகாதார தேவைக்கு நம்பகமான கூட்டாளியாக இருப்பதற்கு இந்தியா பெருமைப்படுகிறது.  சில நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை தொடங்கும். வரும் நாட்களில் மேலும் சில நாடுகளுக்கும் வழங்கப்படும்” என்றார். 

Next Story