இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து பூடான், மாலத்தீவு சென்றடைந்தது


இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து பூடான், மாலத்தீவு சென்றடைந்தது
x
தினத்தந்தி 21 Jan 2021 1:48 AM GMT (Updated: 21 Jan 2021 1:48 AM GMT)

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து பூடான், மாலத்தீவு சென்றடைந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளாம், மியான்மர் மற்றும் செசல்ஸ் நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி பூடானுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் டோசும், மாலத்தீவுக்கு 1 லட்சம் டோசும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. அந்த தடுப்பு மருந்துகள் நேற்று இரண்டு நாடுகளையும் சென்றடைந்தன. கோவிஷீல்டு தடுப்பு மருந்து பூடான் மற்றும் மாலத்தீவு சென்றடைந்ததை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

Next Story