டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பை ஆசாத் மைதானத்தில் திரண்ட விவசாயிகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பை ஆசாத் மைதானத்தில் திரண்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Jan 2021 9:23 AM GMT (Updated: 25 Jan 2021 10:22 AM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர்.

புதுடெல்லி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர். 

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் குடியரசு நாளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மராட்டிய விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் நாசிக்கில் இருந்து கால்நடையாக மும்பைக்குப் பேரணியாகச் சென்றனர்.

ஆசாத் மைதானத்தில் திரண்டுள்ள அவர்கள், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி மாநில கவர்னரை  சந்தித்து மனு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சரத் பவாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

Next Story