திரையரங்குகளில் 50 % க்கு மேல் கூடுதல் இருக்கைகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி


திரையரங்குகளில்  50 % க்கு மேல் கூடுதல் இருக்கைகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 27 Jan 2021 3:24 PM GMT (Updated: 27 Jan 2021 3:24 PM GMT)

திரையரங்குகளில் 50 சதவீத த்திற்கு மேல் கூடுதல் இருக்கைகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


புதுடெல்லி

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்றி அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் திரையரங்குகளில் 50 சதவவீதத்திற்கும் அதிகமானோரை அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளதாம்.
இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிடவும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

சினிமா  தியேட்டர்கள் அதிக வசதியுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தனது திருத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களில் அறிவித்துள்ளது.

அதுபோல் கடந்த ஆண்டு விளையாட்டு வீரர்களுக்காக நீச்சல் குளங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இப்போது அனைவரும் அவற்றைப் பயன்படுத்த மத்திய அரசு  அனுமதித்துள்ளது.

Next Story