டெல்லியில் கடும் பனி மூட்டம்: ரெயில்கள் தாமதம்


டெல்லியில் கடும் பனி மூட்டம்: ரெயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 2 Feb 2021 8:34 AM IST (Updated: 2 Feb 2021 8:34 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் காலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது.  சில அடி தூரங்களே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். டெல்லியில் இன்று குறைந்த பட்ச வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

டெல்லியில் பனிமூட்டம் காணப்படும் நிலையில், காற்றின் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 347 - அதாவது மிகவும் மோசம் என்ற நிலையில் இருப்பதாக காற்று தரம் மற்றும் காலநிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.  பனிமூட்டம் காரணமாக 4 ரெயில்களும் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

Next Story