சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.
புதுடெல்லி,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறையத்தொடங்கியதையடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். cbsc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story