தேசிய செய்திகள்

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை - ராகுல்காந்தி உருக்கம் + "||" + I dont have anger or hatred towards anybody. I lost my father and it was a difficult time for me Rahul Gandhi

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை - ராகுல்காந்தி உருக்கம்

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை - ராகுல்காந்தி உருக்கம்
என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
புதுச்சேரி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று  புதுச்சேரி  வருகை தந்தார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிழந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும். என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக கல்லூரி மாணவிகளிடம் பேசிய ராகுல் காந்தி, நீங்கள் என்னை சார் என்று அழைக்க வேண்டாம். கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் அண்ணா என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள் என்றார். ராகுல் காந்தியின் அழைப்பை அடுத்து அவரை ராகுல் அண்ணா, ராகுல் அண்ணா என்று கல்லூரி மாணவிகள் அழைத்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் ‘தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து’ - ராகுல் காந்தி சாடல்
தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
2. மேற்கு வங்காள தேர்தல்: ஏப்.14 முதல் ராகுல் காந்தி தீவிர பிரசாரம்
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
3. கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு மோசமாக கையாண்டு வருவதாக ராகுல் காந்தி தொடக்கம் முதலே விமர்சித்து வருகிறார்.
4. புதுச்சேரியில் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ அறிவிப்பு; வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பயன் படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
5. கட்சி விட்டு கட்சி மாறும் ஓடுகாலிகளை புறக்கணிக்க வேண்டும்; காமராஜ்நகர் தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி ஆவேசம்
கட்சி விட்டு கட்சி மாறும் ஓடுகாலிகளை புறக்கணிக்க வேண்டும் என்று காமராஜ்நகர் தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை