இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்து


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 17 Feb 2021 5:06 PM GMT (Updated: 17 Feb 2021 5:06 PM GMT)

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

புதுடெல்லி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 2012-ஆம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சி துறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் சந்தித்து பேசிய இரு நாட்டு தலைவர்களும், இரு நாடுகளுக்கு இடையினான விண்வெளி கூட்டுறவை மேலும் விரிவுபடுத்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சி (ASA) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) இடையில் புதிய விண்வெளி தொழில்நுட்பம், புதிய முயற்சிகள், கல்வி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் விரிவான கவனத்தை செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவுள்ளன.மேலும், 2023-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சியின் பங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், 2030-ஆம் ஆண்டளவில் விண்வெளித் துறையின் அளவை மூன்று மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியா சுமார் 700 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story