இரண்டாவது நாளாக பின்னடைவு சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 105 புள்ளிகள் இறங்கியது


இரண்டாவது நாளாக பின்னடைவு சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 105 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 18 Feb 2021 12:01 AM GMT (Updated: 18 Feb 2021 12:01 AM GMT)

புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் இரண்டாவது நாளாக பின்னடைவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 105 புள்ளிகள் இறங்கியது.

மும்பை,

பங்கு வர்த்தகம் சரிவு கண்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 பங்குகளின் விலை சரிவடைந்தது. 8 பங்குகளின் விலை அதிகரித்தது. இறுதியில் சென்செக்ஸ் 400.34 புள்ளிகளை இழந்து 51 ஆயிரத்து 703.83 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 52 ஆயிரத்து 78.15 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 51 ஆயிரத்து 586.34 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,513 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 1,448 நிறுவன பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 146 நிறுவன பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ₹4 ஆயிரத்து 772 கோடியாக குறைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ₹4 ஆயிரத்து 930 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 104.55 புள்ளிகளை இழந்து 15 ஆயிரத்து 208.90 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 15 ஆயிரத்து 314.30 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 15 ஆயிரத்து 170.75 புள்ளிகளுக்கும் சென்றது.


Next Story