கிழக்கு லடாக் கல்வான் தாக்குதல் : சீன வீரர்கள் பலியானதாக முதன் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டது


Image courtesy : Google Maps
x
Image courtesy : Google Maps
தினத்தந்தி 19 Feb 2021 10:08 AM GMT (Updated: 19 Feb 2021 11:41 AM GMT)

2020 ஜூன் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக முதன் முறையாக சீனா உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

புதுடெல்லி

கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், 2020 ஜூன் 15ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர்.மோதல் நடந்த சில தினங்களில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்தாக இந்திய இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆனால், சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகத நிலையில் ரஷ்யா ஊடகமான டாஸ், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டது.ஆனால், சீன தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், 2020 ஜூன் மாதம் எல்லையில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக சீன முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

அதாவது, 2020 ஜூன் எல்லையில் நடந்த மோதலில் உயிர்தியாகம் செய்த  சீன ராணுவ வீரர்களுக்கு கவுரவ பட்டங்களும், முதல் தர தகுதி பாராட்டுகளும் வழங்கப்பட்டதாக மத்திய இராணுவ ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இராணுவ வீரர்களை வழிநடத்திய மற்றும் பலத்த காயமடைந்த கர்னலுக்கு கவுரவ பட்டம் வழங்கப்பட்டதாக சீனாவின் அரசு ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.



Next Story