தேசிய செய்திகள்

கிழக்கு லடாக் கல்வான் மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா + "||" + After admitting it suffered casualties Chinas state media releases video of Galwan Valley clash

கிழக்கு லடாக் கல்வான் மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா

கிழக்கு லடாக் கல்வான் மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா
2020 ஜூன் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தக்கு மோதல் வீடியோவை சீனா வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி

கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், 2020 ஜூன் 15ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர்.மோதல் நடந்த சில தினங்களில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்தாக இந்திய இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆனால், சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகத நிலையில் ரஷ்யா ஊடகமான டாஸ், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டது.ஆனால், சீன தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், 2020 ஜூன் மாதம் எல்லையில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக சீன முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

அதாவது, 2020 ஜூன் எல்லையில் நடந்த மோதலில் உயிர்தியாகம் செய்த 4 சீன இராணுவ வீரர்களுக்கு கவுரவ பட்டங்களும், முதல் தர தகுதி பாராட்டுகளும் வழங்கப்பட்டதாக மத்திய இராணுவ ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இராணுவ வீரர்களை வழிநடத்திய மற்றும் பலத்த காயமடைந்த கர்னலுக்கு கவுரவ பட்டம் வழங்கப்பட்டதாக சீனாவின் அரசு ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசு ஊடகங்கள் கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதலின் வீடியோவை வெளியிட்டு உள்ளன.

ஜூன் மாதத்தில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான மோதலைக் காட்டும் வீடியோவை சீன அரசு ஊடக ஆய்வாளர் ஷேன் ஷிவே பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிரும்போது, ஷென் ஷிவே இந்திய துருப்புக்கள் சீனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தன  என குறிப்பிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கிழக்கு லடாக் கல்வான் தாக்குதல் : சீன வீரர்கள் பலியானதாக முதன் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டது
2020 ஜூன் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக முதன் முறையாக சீனா உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
2. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பலியான வீரர்களுக்கு கவுரவம்
கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டது.
3. குளிர்காலத்தில் எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயார்; கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி பேட்டி
குளிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி சவுகான் கூறினார்.