தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி + "||" + 9153391_Rahul Gandhi carrying the body at the funeral

முன்னாள் மத்திய மந்திரி மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி

முன்னாள் மத்திய மந்திரி மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி
முன்னாள் மத்திய மந்திரி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார்.

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா. அவர் 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மத்திய பெட்ரோலிய துறை மந்திரியாக பதவி வகித்தவர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

73 வயதான அவர் கோவாவில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார்.

அதனை தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்குக்காக டெல்லி எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது இறுதி மரியாதையில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற ராகுல் காந்தி, சதீஷ் சர்மாவின் உடலை தூக்கி சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்ற சம்பவம் நிர்வாகிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

மேலும் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “கேப்டன் சதீஷ் ஷர்மா இறந்தது குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது; மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
2. நாட்டின் நிறுவன கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது - பாஜக மீது ராகுல்காந்தி விமர்சனம்
நாட்டின் நிறுவன கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
3. ராகுல் காந்தி திருமணமாகாதவர், ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார் - முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ‘அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது’ ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது என ராகுல்காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
5. மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள்: ‘மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்’ சென்னை பிரசாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம்
மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள் கிடப்பதாகவும், இதை மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சென்னையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.