குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: குடும்ப உறுப்பினர்களுடன் அமித் ஷா வாக்களித்தார்


குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: குடும்ப உறுப்பினர்களுடன் அமித் ஷா வாக்களித்தார்
x
தினத்தந்தி 21 Feb 2021 6:52 AM GMT (Updated: 21 Feb 2021 6:52 AM GMT)

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் குடும்பத்தினருடன் வாக்குசாவடிக்கு சென்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வாக்களித்தார்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 6 மாநகராட்சிகளுக்கு இன்று காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தோதலில், முதல் முறையாக ஆம் ஆத்மிக் கட்சி சார்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.

காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள நாரன்புரா துணை மண்டல அலுவலகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வாக்கை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வாக்காளர்கள் குஜராத்தை பாஜகவின் கோட்டையாக மாற்றுவார்கள் என்றார்.

Next Story