பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் + "||" + Congress interim chief Sonia Gandhi has written a letter to the Prime Minister regarding fuel price rise
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100- ஐ தாண்டி விற்பனையாகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சோனியா காந்தி, விலை உயர்வை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும் எனவும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள தேர்தலில் அவர் பிஸியாக இருக்கிறார் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது வரம்பை 25 ஆக குறைக்க வேண்டும். கொரோனா கால நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை சோனியா காந்தி வலியுறுத்தினார்.