சொந்த நாயின் போக்குவரத்து செலவுக்கு அரசு பணம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திரிபுரா முதல்-மந்திரி


திரிபுரா முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேவ்
x
திரிபுரா முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேவ்
தினத்தந்தி 22 Feb 2021 8:06 PM GMT (Updated: 22 Feb 2021 8:06 PM GMT)

திரிபுராவில் பா.ஜனதா சார்பில் பிப்லாப் குமார் தேவ் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

இவர் தனது வீட்டு நாய் மற்றும் மகனின் மோட்டார் சைக்கிளை கடந்த 8-ந்தேதி அகர்தலாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இதில் நாயின் விமான பயண செலவுக்காக ரூ.54,918 மற்றும் மோட்டார் சைக்கிளை அனுப்புவதற்கு ரூ.4,644 என அரசு பணத்தை செலவழித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது மாநிலம் முழுவதும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மூத்த காங்கிரஸ் தலைவர் கோபால் ராய் வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே தனது குடும்பத்தினர் மற்றும் ஆடம்பர செலவுகளுக்காக அரசு பணத்தை முதல்-மந்திரி செலவழித்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையிலும் ஆட்சியமைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என கூறியதன் மூலம் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்த பிப்லாப் குமார் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் விவகாரம் கட்சியினரிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story