பொதுமக்களின் அலட்சிய போக்கே கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணம்; சுகாதார அதிகாரி


பொதுமக்களின் அலட்சிய போக்கே கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணம்; சுகாதார அதிகாரி
x
தினத்தந்தி 22 Feb 2021 9:27 PM GMT (Updated: 22 Feb 2021 9:27 PM GMT)

பொதுமக்களின் அலட்சிய போக்கே கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணம் என சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

இந்தூர்,

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த சூழலில் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரமும் ஒன்றாக இருந்தது.  கடந்த சில வாரங்களாக குறைந்த வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஞாயிற்று கிழமை அதிகரித்தது.

இதுபற்றி இந்தூர் நகர சுகாதார அதிகாரி டாக்டர் அமித் மலாக்கர் கூறும்பொழுது, மக்களின் அலட்சிய போக்கினால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முக கவசங்களை அணியாமல், சானிட்டைசர்களை பயன்படுத்திடாமல் இருப்பது போன்றவை மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.  பொதுமக்கள் விழிப்புணர்வுடன் காணப்பட்டால், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.  ஊரடங்கு பற்றி மாநில அரசே முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story