தேசிய செய்திகள்

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவே முயற்சி; கர்நாடக துணை முதல் மந்திரி பேட்டி + "||" + Trying to ensure the safety of the public; Deputy CM of Karnataka

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவே முயற்சி; கர்நாடக துணை முதல் மந்திரி பேட்டி

பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவே முயற்சி; கர்நாடக துணை முதல் மந்திரி பேட்டி
பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவே முயற்சிக்கிறோம் என்றும் எல்லைகளை மூட முயற்சிக்கவில்லை என்றும் கர்நாடக துணை முதல் மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.
பெங்களூரு,

நாட்டில் மராட்டியம் மற்றும் கேரளாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  மராட்டியத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கும், கேரளாவில் சராசரியாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த இரு மாநிலங்களின் எல்லைகளை கர்நாடகா பகிர்ந்து கொள்கின்றன.  அதனால், இந்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வரவேண்டும் என கர்நாடக அரசு கூறியது.

இதனால் கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.  கர்நாடகாவால் விதிக்கப்பட்ட புதிய பயண கட்டுப்பாடுகள் பற்றிய விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கோரி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கர்நாடக சுகாதார  மந்திரி சுதாகர், கர்நாடகா மற்றும் கேரளா இடையேயான மாநில போக்குவரத்துக்கு கர்நாடகா தடை எதுவும் விதிக்கவில்லை என கூறியுள்ளார்.

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் 72 மணிநேரத்திற்கு மிகாமல், ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

இதுபற்றி கர்நாடக துணை முதல் மந்திரி அஸ்வத் நாராயண் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் எல்லைகளை மூட முயற்சிக்கவில்லை.  பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவே முயற்சி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கணவன்-மனைவி தற்கொலை முயற்சி
கணவன்-மனைவி தற்கொலை முயற்சி செய்தனர்.
2. தனியார் நிதிநிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
தனியார் நிதி நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி
ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் 60 பவுன் நகைகள் மற்றும் பணம் தப்பியது.
5. கறம்பக்குடி அருகே 2 பேரை கட்டிப்போட்டு நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி
கறம்பக்குடி அருகே 2 பேரை கட்டிப்போட்டு நகை அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.