கொரோனா தொற்றில்லை சான்றிதழ் அவசியம்; மராட்டியம், கேரளா பயணிகளுக்கு ராஜஸ்தான் நெருக்கடி


கொரோனா தொற்றில்லை சான்றிதழ் அவசியம்; மராட்டியம், கேரளா பயணிகளுக்கு ராஜஸ்தான் நெருக்கடி
x
தினத்தந்தி 25 Feb 2021 5:41 PM GMT (Updated: 25 Feb 2021 5:41 PM GMT)

மராட்டியம் மற்றும் கேரளா பயணிகள் தங்களுக்கு கொரோனா தொற்றில்லை என்ற சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஜெய்ப்பூர்,

மராட்டியம் மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.  இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.

பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படி அரசு தொடர்ந்து கூறி வருகிறது.  எனினும், முக கவசங்களை அணியாமல் விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது நீடித்து வருகிறது.

இந்நிலையில், மராட்டியம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் தங்களுக்கு கொரோனா தொற்றில்லை என்ற சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு முன் டெல்லி அரசு, மராட்டியம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என அறிவித்திருந்தது.  நாளை முதல் மார்ச் மாதம் 15ந்தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் அரசும், மராட்டியம் மற்றும் கேரள பயணிகள் 72 மணிநேரத்திற்கு மிகாமல் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து உள்ளது.

Next Story