சர்வதேச மகளிர் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: - நமது நாட்டு பெண்களின் பல்வேறு சாதனைகள் மூலம் இந்தியா பெருமை அடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் பெண்களுக்கு மேலும் அதிகாரமளிக்கும் வகையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததற்கு எங்கள் அரசு பெருமை கொள்கிறது”என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நாட்டு பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய வரலாறுகளையும் சாதனைகளையும் புரிந்துள்ளனர்.
பாலின நீதியை மேம்படுத்துவதற்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை அகற்றுவதற்கும் கூட்டாக தீர்மானிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story