தேசிய செய்திகள்

எங்களுக்கு பெண்கள் மீது மிக உயர்ந்த மரியாதை உள்ளது - சுப்ரீம் கோர்ட் + "||" + Have highest respect for women, remarks ‘misreported’: SC amid row over comments in rape case

எங்களுக்கு பெண்கள் மீது மிக உயர்ந்த மரியாதை உள்ளது - சுப்ரீம் கோர்ட்

எங்களுக்கு பெண்கள் மீது மிக உயர்ந்த மரியாதை உள்ளது - சுப்ரீம் கோர்ட்
எங்களுக்கு பெண்கள் மீது மிக உயர்ந்த மரியாதை உள்ளது” என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான சுப்ரீம் கோர்ட் திங்கள் கிழமை தெரிவித்தது.
புதுடெல்லி


கடந்த மார்ச் 1 ம் தேதி மராட்டிய  மாநில மின் உற்பத்தி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அவர் பிப்ரவரி 5ம் தேதி மும்பை ஐகோர்ட்  அவருடைய ஜாமீன் மனுவை ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரையும் உள்ளடக்கிய  சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்  இதனை விசாரித்தது.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டபவரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வாரா என்று கேட்டது. அதனால், சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

பாலியல் பலாத்கார குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயது நிரம்பியதும் அவரை திருமணம் செய்து கொள்வாrஆ என்று சுப்ரீம் கோர்ட்  உறுதிமொழி கேட்டதாக நீதித் துறைப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டது.

சிபிஐ (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மார்ச் 1ம் தேதி பாலியல் பலாத்காரம் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது கூறப்பட்டதாக வெளியான கருத்துக்களை தலைமை நீதிபதி திரும்பப் பெறுமாறு பிருந்தா காரத் கேட்டுக் கொண்டார்.

பெண்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் பலர், பிரபலங்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர், தலைமை நீதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருடைய கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஒரு  கடிதத்தை எழுதியிருந்தனர்.

சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்  திருமணத்திற்குப்பின் மனைவியை சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான எந்தவொரு வழக்கும் எங்கள் முன் இருந்ததாக எங்களுக்கு நினைவில் இல்லை… எங்களுக்கு பெண்கள் மீது அதிக மரியாதை உண்டு. என்று இன்று தெரிவித்தது.

எங்களுடைய நற்பெயர் எப்போதும் வழக்கறிஞர்களின் பார் கைகளில் உள்ளது” என்று சுப்ரீம் கோர்ட்  தெரிவித்தது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த கருத்துக்கு ஒப்புதல் அளித்தனர். இன்று  பட்டியலிடப்பட்ட வழக்கில் மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜு, மக்களில் ஒரு பகுதியினர் நிறுவனத்தை களங்கப்படுத்துவதாகவும், இதைச் சமாளிக்க ஒருவித வழிமுறை தேவை என்றும் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டை ஆதரித்த இந்திய பார் கவுன்சில், சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய செயல்பாட்டாளர்கள் அவருடைய கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மிக உயர்ந்த நீதித்துறையை அவதூறு செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இதன் நடவடிக்கைகளில் அரசியல் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்காக வாதாடிய வக்கீல் ‘திடீர்’ விலகல்
சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்காக வாதாடிய வக்கீல் மொகித் டி.ராம் அக்குழுவில் இருந்து விலகினார்.
2. மராத்தா சமூகத்தினருக்கான தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கான தனி இடஒதுக்கீடு ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்து உள்ளது.
3. ‘ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது’; சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா மனு
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
4. சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு; ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
5. சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்து ஜனாதிபதி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.