தேசிய செய்திகள்

எங்களை துரோகிகள் என கூறுபவர்களே துரோகிகள்; மம்தா பானர்ஜியை சாடிய எம்.பி. சிசிர் அதிகாரி + "||" + Those who call us traitors are traitors; Sisir Adhikari MP slams Mamata Banerjee

எங்களை துரோகிகள் என கூறுபவர்களே துரோகிகள்; மம்தா பானர்ஜியை சாடிய எம்.பி. சிசிர் அதிகாரி

எங்களை துரோகிகள் என கூறுபவர்களே துரோகிகள்; மம்தா பானர்ஜியை சாடிய எம்.பி. சிசிர் அதிகாரி
எங்களை துரோகிகள் என கூறுபவர்களே துரோகிகள் என மம்தா பானர்ஜியை எம்.பி. சிசிர் அதிகாரி சாடியுள்ளார்.
கிழக்கு மிட்னாப்பூர்,

294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 27ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று மாலை 5.30 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.  இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் புர்பா மேதினிப்பூரில் எக்ரா பகுதியில் பேரணி ஒன்று நடைபெறுகிறது.  அதில் அமித்ஷா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

பா.ஜ.க.வுடன் போட்டியில் உள்ள திரிணாமுல் காங்கிரசில் இருந்து கடந்த ஆண்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரியை முதல் மந்திரி மம்தா பானர்ஜி துரோகி என கூறினார்.  மம்தாவுக்கு மிக நெருங்கிய உதவியாளராக இருந்து வந்த சுவேந்து திடீரென அக்கட்சியில் இருந்து விலகி எதிரணியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதேபோன்று மக்களவை எம்.பி.யான சிசிர் அதிகாரியையும் அவர் துரோகி என்று கூறியுள்ளார். சுவேந்து அதிகாரியின் தந்தையான சிசிர், நாங்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கூறியுள்ளார்.  திரிணாமுல் காங்கிரசின் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் சிசிர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெற உள்ள பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொள்ள போகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சிசிர் அதிகாரி, பொது கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன் (அமித்ஷாவின் பேரணியில்) என்று கூறியுள்ளார்.

எங்களை துரோகிகள் என கூறுபவர்களே துரோகிகள் என்று மம்தா பானர்ஜியை அவர் சாடியுள்ளார்.  பா.ஜ.க. பேரணியில் பங்கேற்க செல்லும் முன் சிசிர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களாலேயே பா.ஜ.க.வில் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதனை அவர்கள் (திரிணாமுல் காங்கிரசார்) செய்யட்டும்.  என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை நான் செய்வேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்பு காட்டுகின்றனர் சக நடிகைகளை சாடிய கங்கனா
இந்தி பட உலகில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் கங்கனா ரணாவத்.