

சூர்யாபேட்டை
தெலுங்கானாவின் சூர்யாபேட்டையில் இன்று 47 வது ஜூனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கியது.
சூர்யாபேட்டை மாவட்டத்தின் கபடி சங்கத்துடன் இணைந்து தெலுங்கானா கபடி சங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டிகள் மார்ச் 25 வரை சூர்யாபேட்டையில் உள்ள எஸ்பி அலுவலக மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் அமரும் கேலரி சரிந்ததால் பலர் காயம் அடைந்தனர்
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
கபடி சாம்பியன்ஷிப் போட்டிகளில் 29 மாநிலங்களைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.